என் உயிரினும் மேலான பாட்டாளி இளஞ்சிங்கங்களே!.. கொண்ட இலக்கை வென்று முடிக்கும் வரை ஓயாத உயிரினம் ஒன்று இந்த உலகில் உண்டென்றால், அதற்கு பாட்டாளி இளஞ்சிங்கங்கள் என்று தான் பெயர். மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக நீ உழைக்கும் உழைப்பைப் பார்க்கும் போது என் மனதில் இப்படித் தான் தோன்றியது.
தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளிலேயே உனது உழைப்பு தொடங்கி விட்டது. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது அறிவிக்கப்படும் என்று காத்திருந்து உடனடியாக சுவர் விளம்பரங்களை எழுதினாய். மக்களவைத் தேர்தல்களின் போது பரந்து விரிந்து கிடக்கும் தொகுதி முழுவதும் வேட்பாளர்கள் பயனித்து வாக்காளர்களை சந்தித்து வாக்கு கேட்பது சாத்திமில்லை என்பதை உணர்ந்து வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறாய்.
ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர், அவரைப் பற்றிய விவரங்கள், எதற்காக அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஆகியவற்றைப் பற்றி சமூக ஊடகங்களில் எழுதி மக்களிடம் கொண்டு செல்கிறாய், இப்படியாக நீ செய்யும் பணிகளை பட்டியலிட வேண்டும் என்று நினைத்தால் பக்கங்கள் போதவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகளிலும் அதன் வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும், மீதமுள்ள 30 தொகுதிகளிலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை மக்களவை உறுப்பினர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது.
அய்யோ, நமது வீட்டுப் பிள்ளைகள் இப்படி உழைக்கிறார்களே, அவர்களை கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளச் சொல்லலாமா? என்று என மனம் என்னை கேட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால், இது தேர்தல் பணியாயிற்றே, கொஞ்சம் ஓய்வெடுத்தால் நாம் பின்தங்கி விட வேண்டி இருக்குமே? என்ற எண்ணமும், நாமே கூறினால் கூட நமது சிங்கக் குட்டிகள் வெற்றிக் கோட்டைத் தொடும் வரை ஓய்வெடுக்க மாட்டார்களே என்ற உண்மையும் அப்படி சொல்லவிடாமல் தடுக்கின்றன.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டும் தான் இருக்கின்றன. தேர்தல் ஓட்டத்தில் நாம் தான் முன்னணியில் இருக்கிறோம். அதை நாம் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், இனிவரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும் மிகவும் முக்கியம் ஆகும். அதை மனதில் கொண்டு அடுத்து வரும் 5 நாட்களும் மிகக்கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றிக்கனியைப் பறித்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை… உங்கள் ஓட்டத்தைத் தொடருங்கள் பாட்டாளி இளஞ்சிங்கங்களே!
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










