டிசம்பர்-2023 தமிழ்நாட்டில் பல்வேறான பகுதிகளில் வரலாற காணாத மழை பொழிந்து மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இது போன்ற இடரான சூழ்நிலையில் இடரை சமாளிக்கவும், நீரை சேமித்து பயன்படுத்தவும் நாம் தயாராக இருக்கிறோமா? என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக உள்ளது.
நம் தமிழக பூமி தொன்று தொட்டு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள பகுதி நம் முன்னோர்கள் விவசாயத்திற்காகவும், குடிநீர் தேவைக்காகவும் பல அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். ஆனால் நம் தலைமுறையில் பல நீர் நிலைகளை நாம் இழந்து உள்ளோம்.
இப்பதிவு யாரையும் குறைக்கூறுவது நோக்கம் மல்ல. நம் வாழ்வாதாரத்திற்கு தேவையான நீரையும், நீர் நிலைகளையும் காக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது என்பதை எடுத்துரைப்பதே
கிணறுகள்:-
கடந்த 20 வருடங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் கிணறுகள் காணாமல் மறைந்துள்ளது. வீட்டுகிணறுகள் மட்டுமின்றி விவசாய கிணறுகளை வெட்டவும் மக்கள் முன்வருவதில்லை. போர்வெல் பம்புகள் அமைப்பதில் மக்கள் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ளனர். இதற்கான காரணம் கிணறு வெட்ட ஆகும் செலவு மற்றும் கால விரயமும் ஆகும்.
மக்கள் வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் கிணறுகள் வெட்ட ஆர்வம் கொள்ள வேண்டும். நிலத்தடி நீரினை சேமிக்க பல அடிப்படை திட்டங்கள் இருந்தாலும், அதனை பின்பற்றாமலும், பராமரிக்காமலும் உள்ளோம். இந்நிலை மாற வேண்டும் இல்லம் தோறும் நிலத்தடி நீர் சேமிப்பு அமைப்பினை நிறுவி அதனை பராமரிக்க வேண்டும்.
அரசு தேவையான இடங்களில் அணைகளை நிருவியும், நீரோட்டம் செல்லும் அனைத்து வழிப்பாதைகளையும் ஆழ அகல தூர்வாரி பராமரிக்க வேண்டும்.
விவசாய நிலங்களில் செல்லும் வாய்க்கால்களை மக்கள் ஒன்று சேர்ந்து பராமரிக்க வேண்டும்.
வருங்காலங்களில் மும்மாரி மழை பெய்து, ஆறு, குளம் ஏரி, கம்மாய் பெருகி, விவசாயம் செழித்து மக்கள் செழிப்புடன் வாழ்வாங்கு வாழ வேண்டும்.