• Sat. Oct 18th, 2025

உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாளை புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Byமு.மு

May 24, 2024
உருவானது காற்றழுத்த தாழ்வு மண்டலம்; நாளை புயலாக வலுப்பெறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலையில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று நிலை கொண்டிருந்தது. இந்நிலையில் தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமானது. வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். புயலாக வலுவடைந்து பிறகு வடக்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று வங்கதேசம் நோக்கி நகரும். மே 26-ம் தேதி நள்ளிரவு வங்கதேசத்தின் சாகர் தீவு மற்றும் கேபபுரா இடையே தீவிர புயலாக கரையை கடக்கிறது.

வங்கதேசத்திற்கு அருகே சாகர் தீவுக்கும் கேப்புபராவிற்கும் இடையே ரிமல் புயல் கரையை கடக்கும். தென்கிழக்கு அரபி கடலில் கேரளாவை ஒட்டி மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்றும் தெரிவித்துள்ளது.