• Sat. Oct 18th, 2025

அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Byமு.மு

Apr 8, 2024
வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதுமில்லை. அதற்கு அடுத்து வரும் நான்கு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2°-3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் 12ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 3° -5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் 2° -4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 40°- 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°-40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34°-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

மேலும், 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக தமிழகத்தில் 2° 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அடுத்த ஐந்து தினங்களில் காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50 % ஆகவும், மற்ற நேரங்களில் 40-70 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-80% ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.