• Wed. Dec 3rd, 2025

இன்று முதல் ஏப்.29 வரை தமிழகத்தில் வெப்பநிலை உயர வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

Byமு.மு

Apr 25, 2024

இன்று முதல் ஏப்ரல் 29 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்பம், ஈரப்பதம் இருக்கும்போது ஒரு சில இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். இன்று முதல் ஏப்ரல் 28 வரை தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.