• Sat. Oct 18th, 2025

பப்புவா நியூ கினியாவில் இன்று பலத்த நிலநடுக்கம்!.

Byமு.மு

May 21, 2024
பப்புவா நியூ கினியாவில் இன்று பலத்த நிலநடுக்கம்

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் இன்று பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பப்புவா நியூ கினியாவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா அருகில் உள்ளது பப்புவா நியூ கினியா தீவு. இந்த பகுதியை சுற்றி ஏராளமான தீவுகள் உள்ளன. பப்புவா நியூ கினியாவில், மொரோபியில் உள்ள லேயிலிருந்து வடகிழக்கே 58 கிலோமீட்டர் (36 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமிக்கு அடியில் 45 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.