• Wed. Dec 3rd, 2025

இலங்கையின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் அநுர குமார திசநாயக!..

Byமு.மு

Sep 23, 2024
இலங்கையின் புதிய அதிபராக இன்று பதவியேற்கிறார் அநுர குமார திசாநாயக்க

கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக இன்று பதவியேற்கிறார். இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்க உள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசநாயக வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அநுர குமார திசநாயக இலங்கையின் புதிய அதிபராகிறார். இலங்கை அதிபர் தேர்தல் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்தது. இதில் அனுர குமார திசநாயகே, சஜித் பிரேமதாசா, ரணில் விக்கிரமசிங்கே உள்ளிட்டோர் அதிபர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.