• Sun. Oct 19th, 2025

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதமான நிலநடுக்கம்

Byமு.மு

Aug 13, 2024
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதமான நிலநடுக்கம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் கவிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் நிலநடுக்கம் மெக்சிகோ எல்லையை ஒட்டியுள்ள சான் டியோகா பகுதி முழுவதும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை என அமெரிக்க தேசிய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் தீ அணைப்புத்துறை உறுதி செய்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த வாரம் 5.2 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது 4.6 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.