• Sun. Oct 19th, 2025

கத்தார் பிரதமரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி.

Byமு.மு

Feb 15, 2024
கத்தார் பிரதமரை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி கத்தாரின் தோஹாவில் தனது முதல் நிகழ்ச்சியாக கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி-யைச் சந்தித்தார்.

வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, நிதி மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். 

மேற்கு ஆசியப் பகுதியில் அண்மையில் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து அவர்கள் விவாதித்தனர்.  அப்பகுதியிலும் பிற பகுதிகளிலும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். அதன்பின், கத்தார் பிரதமரால் அளிக்கப்பட்ட விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.