கொரியக் குடியரசின் அதிபருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையே ராஜதந்திர உறவுகள் தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொரிய குடியரசின் அதிபர் திரு. யூன் சுக் இயோலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் கூட்டாண்மை ஆகியவற்றின் பயணத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், சிறப்பு உத்திப்பூர்வமான கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் திரு. யூன் சுக் இயோலுடன் நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்ப்பதாகக் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையிலான ராஜாங்க உறவுகள் தொடங்கி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இது பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் வளர்ந்து வரும் கூட்டாண்மைகளின் பயணமாகும். கொரிய குடியரசின் அதிபர் திரு. யூன் சுக் இயோலுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், நமது சிறப்பான உத்திப்பூர்வமான கூட்டாண்மையை வலுப்படுத்தவும் விரிவுபடுத்தவும் அவருடன் நெருக்கமாக பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.”