• Sat. Oct 18th, 2025

சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கை!.

Byமு.மு

May 11, 2024
சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கை

அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் கடுமையான சூரிய காந்த புயலுக்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று இரவு முதல் நாளை இரவு வரை கலிபோர்னியா – தெற்கு அலபாமா வரை அரோரா காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூமியின் வட அரைகோளத்தில் காந்த புயல் காரணமாக தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. செயற்கைகோள்களின் செயல்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க ஆய்வகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.