தில்லியில் உள்ள இந்திரப் பிரஸ்தா மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நிதியைக் கல்வி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்று தொழில் துறையினரைக் கேட்டுக் கொண்டார்.
மாணவர்கள்தான் ஜனநாயகத்தின் மகத்தான பங்குதாரர்கள் என்று குறிப்பிட்ட தன்கர், மாணவிகள் ஆர்வமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவர்கள் தங்களின் திறமையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும், தங்களது முழுத் திறனை உணரவும் ஒரு சூழல் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். “நீங்கள் பெரிதாக சிந்திக்க வேண்டிய நேரம் இது, நீங்கள் சிந்திக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது” என்று அவர் மேலும் கூறினார்.
சிறப்பான நிர்வாகத்தின் விளைவாக, பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வளர்ச்சியடைந்த பாரதம் 2047 Bharat@2047 என்ற நோக்கத்தை அடைய நமது பெண்கள் முதன்மைப் பங்கேற்பாளர்களாக இருக்க உதவியுள்ளது என்று குடியரசு துணைத்தலைவர் மேலும் கூறினார். “பாரதத்தை வளர்ந்த நாடாக மாற்ற எங்கள் பயணத்தை நீங்கள் திறம்பட வழிநடத்துவீர்கள். உலக நாடுகள் மத்தியில் அதை உயரத்திற்கு கொண்டு செல்வீர்கள்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கல்வி மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றத்திற்கான கருவி என்று வர்ணித்த தன்கர், சமூகத்தில் சமத்துவத்தைக் கொண்டு வரும் மாற்றமே கல்வி என்று கூறினார். பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “பெண் கல்வி ஒரு புரட்சி, பெண் கல்வி ஒரு சகாப்தத்தை மாற்றி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.
மாணவர்கள் ஒருபோதும் தோல்வி பயம் கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்தினார். “தோல்வி பயம் வளர்ச்சியை அழிக்கும், தோல்வி பயம் புதுமைக் கண்டுபிடிப்பு முயற்சிகளை அழிக்கும்” என்று கூறிய குடியரசு துணைத்தலைவர், “ஒவ்வொரு தோல்வியையும் ஒரு படிக்கல்லாக மாற்றிக் கொள்ள வேண்டும்” என்றார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










