திமுக தலைமையிலான அரசால் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, அவசர கதியில் வீண் விளம்பரத்திற்காக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையில் துன்பப்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. நேற்று நள்ளிரவு சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கடும் அவதியடைந்துள்ளனர். மக்கள் படும் துன்பங்களைப்பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் சுயநலப்போக்கோடு செயல்படும் திமுக தலைமையிலான விளம்பர அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் சென்னைக்கு வெளியே அமைந்துள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு பேருந்து நிலையத்திற்கு வந்த போதும் போதிய பேருந்துகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் பல்வேறு பணி நிமித்தமாக சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பேருந்துகள் இல்லாமல் நேற்று இரவு பல மணிநேரம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காத்திருந்து கடும் அவதிக்குள்ளாகியிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. அதாவது, வருகின்ற பேருந்துகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் என்று கூறியதால், அதில் ஏற முடியாமல் சாதாரண பேருந்துகளை எதிர்பார்த்து பல மணி நேரம் கால் கடுக்க காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக தலைமையிலான அரசு விடுமுறை காலங்களில் கூடுதலாக 300 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்புகளை மட்டுமே கொடுக்கிறது. ஆனால், உண்மை நிலை என்னவென்றால் போதிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் பேருந்து நிலையத்திலேயே விடிய விடிய காத்திருக்க வேண்டிய கொடுமைக்கு ஆளாகவேண்டியுள்ளது. அதாவது, பல மணி நேரமாக பேருந்துகள் கிடைக்காமல் காத்திருந்து விரக்தியின் உச்சத்திற்கு சென்ற பயணிகள் நள்ளிரவு 2 மணியளவில் அங்கு வந்த பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும்,பயணிகள் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியேறும் பகுதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது மிகவும் வேதனை அளிக்கிறது.
மேலும், திமுக தலைமையிலான அரசின் நிர்வாக சீர்கேடுகளால், அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இயக்கப்படுவதால், தமிழக மக்களின் பாதுகாப்பே இன்றைக்கு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் படிக்கட்டு இல்லா அரசு பேருந்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவா்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திகில் பயணம் செய்யும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக,சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்தில் பெண் பயணி ஒருவர் பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தபோது, திடீரென இருக்கையின் கீழே இருந்த பலகை உடைந்து அதன் வழியே கீழே விழுந்துள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் உயிர் பிழைத்து இருக்கிறார். திமுக தலைமையிலான ஆட்சியில் அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பின்றி இருப்பதால் பொதுமக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளை கல்லூரியின் முதல்வரே திமுக நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்வது வன்மையாக கண்டிக்கதக்கது. அதிலும், மாணவ, மாணவியர்களை அழைத்து செல்வதற்காக, மாநகர போக்குவரத்துக் கழக அரசு பேருந்துகளையே பயன்படுத்துவது திமுகவினரின் அராஜகத்தை காட்டுகிறது. இதுபோன்று, அரசு பேருந்துகளை இன்றைக்கு திமுகவினர் தங்கள் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி விடுவதால்தான் பொதுமக்கள் போதிய பேருந்துகள் இன்றி சாலையில் அமர்ந்து போராடவேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் தமிழக மக்கள் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே, திமுகவினர் திராவிட மாடல் என்று சொல்லி திராவிடத்தை இழிவு படுத்துவதை விட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு தேவையான பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தேவையான கட்டமைப்பு வசதிகளை விரைந்து ஏற்படுத்தி தர வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு அனைத்து நாட்களிலும் போதிய பேருந்து வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என திமுக தலைமையிலான விளம்பர அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










