ஜம்மு காஷ்மீர், ஆந்திரா மற்றும் ஒடிசாவின் எஸ்.டி பட்டியலில் சில புதிய சமூகங்கள் சேர்க்கப்பட உள்ளன
பழங்குடியின சமுதாயத்தினரின் சமூக-கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களின் மேம்பாட்டிற்கும் அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா
பழங்குடியின சமூகங்களின் சமூக-கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய பழங்குடியினர் விவகாரத் துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த பழங்குடியின சமூகங்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்கள் குறித்து பேசிய அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு (ஜம்மு-காஷ்மீர்) பட்டியல் பழங்குடியினர் (திருத்தம்) மசோதா- 2024, ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பழங்குடியினர் பட்டியலில் ‘பஹாரி இனக்குழு, படரி பழங்குடியினர், கோலி மற்றும் காடா பிராமணர்’ சமூகங்களை சேர்க்க நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையில் 9 பிப்ரவரி 2024 அன்று நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா மக்களவையில் 6 பிப்ரவரி 2024 அன்று நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, ஆந்திரப் பிரதேசம் தொடர்பான அரசியலமைப்பு (பட்டியல் பழங்குடியினர்) (திருத்தம்) மசோதா – 2024 மற்றும் ஒடிசாவைப் பொறுத்தவரை அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்) (திருத்தம்) மசோதா – 2024 ஆகியவை அந்தந்த பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் பொருட்டு மக்களவையில் 8 பிப்ரவரி 2024 அன்று நிறைவேற்றப்பட்டன. பழங்குடியினர் விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். இந்த மசோதா முன்னதாக 6 பிப்ரவரி 2024 அன்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
நாட்டில் உள்ள பழங்குடியின சமுதாயத்தினரின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். இந்த மசோதா மூலம், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களுக்கு நீதி கிடைக்கும் என்று அவர் கூறினார்.
இந்த மசோதாக்கள் சட்டமாக மாறிய பிறகு, ஜம்மு-காஷ்மீர், ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவின் பட்டியல் பழங்குடியினர் திருத்தப்பட்ட பட்டியலில் புதிதாக பட்டியலிடப்பட்டுள்ள சமூகங்களின் உறுப்பினர்களும் தற்போதுள்ள திட்டங்களின் கீழ் பழங்குடியினருக்கான பலன்களைப் பெற முடியும். அரசுக் கொள்கையின்படி அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களில் சேர்க்கையிலும் இட ஒதுக்கீட்டுப் பயன்களையும் பெற அவர்களுக்கு உரிமை உண்டு.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










