அனைத்து அம்சங்களிலும் இந்தியாவின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பற்றி எடுத்துரைத்த குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், இந்தியா என்பது அதன் ஆற்றலால் வரையறுக்கப்பட்ட தேசம் மட்டுமல்ல, அதன் ஆற்றலை உணர்ந்து கொள்ளும் நாடாக தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
புதுதில்லியில் இன்று நடைபெற்ற இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 37-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், “இந்தியா போதுமான சக்தியைப் பெற்றிருந்தும், அதனை வெளிப்படுத்தாமல் இருந்தது. ஆனால் இப்போது முழு அளவில் சக்தியை வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டது என மாணவர்களிடம் அவர் கூறினார்.
நாட்டின் செயல்படுத்தும் சூழல் அமைப்பை சுட்டிக் காட்டிய அவர், “இந்த நம்பமுடியாத வேகத்தை கைப்பற்றவும், வெளிப்படைத்தன்மையைப் பயன்படுத்தவும், பொருளாதார ஏற்றத்தை மேம்படுத்தவும், வாய்ப்புகளை தனிப்பட்ட தலைசிறந்த படைப்புகளாக மாற்றவும்” அவர்களை வலியுறுத்தினார்.
“அசாதாரணமான உள்கட்டமைப்பு வளர்ச்சி, பரவலான தொழில்நுட்ப ஊடுருவல், டிஜிட்டல் மயமாக்கலின் விரைவான வேகம் மற்றும் வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்திற்கான உறுதிப்பாடு” ஆகியவை இனி பரபரப்பான கேட்டறியா வார்த்தைகள் அல்ல, அவை கள யதார்த்தம் என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், இந்தியாவின் “பொருளாதார உயிர்ச்சக்தி” குறித்து கவனத்தை ஈர்த்தார். “அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் கட்டண முறையால் தூண்டப்பட்ட நமது நெகிழ் தன்மையுடன் கூடிய நிதி சூழல் அமைப்பு உலகளாவிய மாதிரியாக மாறியுள்ளது. நாம் அதைப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல், அதை ஏற்றுமதி செய்கிறோம், “என்று அவர் விரிவாக எடுத்துக் கூறினார்.
புதுதில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாடு இந்தியாவின் தலைமைக்கு ஒரு சான்று என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மற்றும் பங்கேற்புக்கான இந்தியாவின் உறுதிப்பாடு தற்போது எவ்வாறு உலகளவில் எதிரொலிக்கிறது என்று குறிப்பிட்டார். “நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஈடுபடுத்துவதிலிருந்து, ஆப்பிரிக்க ஒன்றியத்தை ஜி 20 உறுப்பினராக சேர்ப்பது மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியைத் தொடங்குவது வரை, இந்தியா உலகளாவிய தெற்கின் குரலாக உருவெடுத்துள்ளது” என்று தன்கர் கூறினார்.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் நாகேஸ்வர ராவ், பேராசிரியர் உமா காஞ்சிலால், பேராசிரியர் சத்யகம், இந்திரா காந்தி பல்கலைக்கழக இணை துணைவேந்தர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










