தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப்பெருந்தகை மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, அவரது 71ஆவது பிறந்தநாளையொட்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு ஆகியோர் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 71ஆவது பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளுடன் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய போது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, அவரது 71ஆவது பிறந்தநாளையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
#CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து #CPIM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, அவரது 71-வது பிறந்தநாளையொட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ, தலைமைக் கழக செயலாளர் துரை வையாபுரி.
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் வே. நாராயணசாமி அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமா எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, அவரது 71ஆவது பிறந்தநாளையொட்டி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமா எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.அப்துல் சமது ஆகியோர் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.…
புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் வாழ்த்து:

தமிழக முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்…
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று 71-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவர் நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சமூகநீதி உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும் வாழ்த்துகிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து:

தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவரது 71-ஆம் பிறந்தநாளான இன்று எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் அவரது பொதுவாழ்வு தொடர வாழ்த்துகிறேன்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து:

தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். உடல் வலிமையும், உள்ள உறுதியும் குன்றாது நெடுங்காலம் நலமோடு வாழ்ந்து அரசியல் பணிகளைத் தொடர்ந்திட என்னுடைய அன்பினையும், வாழ்த்துகளையும் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் வாழ்த்து:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, அவரது 71-வது பிறந்தநாளையொட்டி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து:

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.