தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டத்தை 15-9-2022 அன்று அறிமுகப்படுத்தினார். அத்திட்டத்தின் மூலம் 31,000 அரசுப் பள்ளிகளில் 17 இலட்சம் குழந்தைகள் காலை உணவைப் பசியாற உண்டு, பள்ளிகளில் படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதனால், முதலமைச்சர் அவர்களைத் “தாயுமானவர்” என்று போற்றுகின்றனர் தமிழ்நாட்டு மக்கள். தாய் மனம் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தாய்க்குலம் பெருமை கொள்ளும் வகையில் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறார்கள்.
பெண்கள், பிறந்தது முதல் தந்தையையும், திருமணம் ஆனபின் கணவனையும், பின்னர் மகன் அல்லது மகளையும் சார்ந்து வாழ வேண்டியவர்களாக உள்ளனர்.
பெண்கள் யாருடைய கையையும் எதிர்பாராமல் வேலை வாய்ப்புப் பெற்று வருமானம் ஈட்டக் கூடியவர்களாகத் திகழ்ந்து தற்சார்புநிலை அடைய வேண்டும் என்பதற்காக, 1989 ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அரசுப் பணிகளில் மகளிர்க்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கினார்கள். அதனால், இலட்சக் கணக்கான மகளிர் அரசுத் துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுப் பொருளாதாரத்தில் தற்சார்புநிலை அடைந்து வாழ்வில் உயர்ந்துள்ளனர்.
அதே 1989ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட மகளிர் திட்டத்தில் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு கிராமப்புற மகளிர் பொருளாதாரத்தில் உயர்ந்திட வழிவகுக்கப்பட்டது. இத்திட்டங்களுடன் சமசொத்துரிமைச் சட்டம், சுய வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவைகளால் பெண்கள் சமுதாயம் எழுச்சி பெற்று வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021-இல் பொறுப் பேற்றது முதல் மகளிர் சமுதாய முன்னேற்றத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வருமானம் இன்றிச் சிரமப்படும் ஏழை மகளிரின் துயர் துடைத்திட அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி -கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, 1 கோடியே 16 லட்சம் மகளிர்க்கு மாதம்தோறும் 1,000 ரூபாயை, இது உதவித் தொகை அல்ல; உரிமைத் தொகை என வழங்குகிறார்கள். மகளிர் சமுதாயத்தை மனம் குளிரச் செய்துள்ள இந்த மாபெரும் திட்டத்தை கர்நாடக மாநில அரசு செயல்படுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பாராட்டியது.
அத்துடன், அரசுப் பள்ளிகளில் படித்துக் கல்லூரியில் சேரும் மகளிர்க்குப் “புதுமைப் பெண்” திட்டத்தை நடைமுறைப்படுத்தி 4,81,705 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி, மகளிர் இடையே தன்னம்பிக்கை உணர்வை ஊட்டியுள்ளார் நம் முதலமைச்சர் அவர்கள்.
“விடியல் பயணம்” மூலம் மகளிர்க்குக் கட்டணம் இல்லாப் பேருந்துப் பயணத் திட்டம் தந்து ஒவ்வொரு பெண்ணும் மாதம் ரூ.888/- வரை சேமிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளார்கள். இதுவரை இத்திட்டத்தில் மகளிர் 445 கோடி முறை பயணம் செய்து பயனடைந்துள்ளனர்.
முதலமைச்சர் அவர்கள் பல்வேறு திருமண நிதி உதவித் திட்டங்களின்கீழ் 1,01,712 மகளிர்க்கு ரூ.827 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்கள்.
முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சராகத் திகழ்ந்தபோது தமிழ்நாடு முழுவதிலும் மகளிர் சுய உதவிக் குழு மகளிர்க்கு மணிக்கணக்கில் நின்றபடியே கடனுதவி வழங்கி, அவர்களின் முகம் மலரச் செய்தவர்; அவர்கள் வாழ்வில் வளம்பெருகச் செய்தவர்.
அந்த மகளிர் சுய உதவிக் குழு மகளிர் நலன் மேம்பட 2021-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் 12 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடனுதவி வழங்கி, மகளிர் இடையே தன்னம்பிக்கை உணர்வை வளர்த்துள்ளார்.
அத்துடன் பணிபுரியும் மகளிர் ஆங்காங்கே எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகளை அகற்றி, அவர்களுக்கிடையே பாதுகாப்பு உணர்வை வளர்த்திட மாநிலம் முழுவதும் 97 கோடி ரூபாயில் 16 பணி புரியும் மகளிர் விடுதிகளை அமைத்திடவும் உத்தரவிட்டுள்ளார்கள்.
முக்கிய விருந்தினர்கள் வரும் வழிகளில் காவல்துறையில் பணியாற்றும் மகளிரைப் பாதுகாப்பிற்காக நெடுநேரம் நிறுத்துவது கூடாது என ஆணையிட்டு, அவர்களை இலகுவான பணிகளில் ஈடுபடுத்தியவர் முதலமைச்சர் அவர்கள்.
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 218 கோடியே 88 இலட்சம் பெண் குழந்தைகள் பயனடையச் செய்துள்ளார் நம் முதலமைச்சர் அவர்கள்.
இப்படி, தாய் மனம் கொண்ட நமது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிர் சமுதாயத்தினைக் காப்பதற்காகச் செயல்படுத்தியுள்ள பல்வேறு திட்டங்களால் பயனடையும் மகளிர் சமுதாயம் இன்று முதலமைச்சர் அவர்களை வாழ்க வாழ்க, பல்லாண்டு வாழ்க என வாழ்த்திக் கொண்டுள்ளது.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










