பெண்ணினத்தின் அல்பையும் தியாகத்தையும், கடின உழைப்பையும், பெருமைகளையும் இந்த உலகிற்கு எடுத்து காட்டும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 8-ஆம் நாள் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் அனைத்து மகளிருக்கும் எனது இதயம் கனிந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்தையும் சமாளிக்கும் திறனை அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பினையும் இயற்கையாகவே பெண்கள் பெற்றுள்ளதை எண்ணிப் பெருமிதம் அடைகிறேன். மேலும், “பெண்கள் எளிதில் வெளிக்கொண்டு வர முடியாத அரிய திறன் மிக்க களஞ்சியங்கள்” என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளின்டனின் மனைவி ஹிலாரி கிளின்டன் அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதையும் இந்நேரத்தில் நினைவுகூற விரும்புகிறேன். நமது நாட்டில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. அதனால் தான் நமது தேசத்தையே தாய்நாடு என பெயரிட்டு அழைக்கிறோம்.
ஒரு பெண் என்பவள் தாயாக, மகளாக, மனைவியாக, சகோதரியாக, நல்ல தோழியாக, எல்லோரையும் அரவணைத்து செல்லும் பாட்டியாக என பல்வேறு பரிணாமங்களில் வாழ்நாள் முழுதும் தனது கடமையை சிறப்புடன் நிறைவேற்றுபவள். அதேபோன்று, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் போதும் அந்த குடும்பமே மேன்மை பெறும் என்பது உலகம் அறிந்த உண்மை. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை தங்களுக்கு கிடைத்த பொக்கிஷமாக பாதுகாக்கவேண்டும். மேலும், நமது நாட்டில் பெண்களை தெய்வமாக போற்றுவதால் தான் தாகத்தை தணிக்கும் தண்ணீரை சுமந்து செல்லும் நதிகளுக்கு காவேரி. கங்கை, யமுனை, வைகை என பெயரிட்டுள்ளோம்.
பெண்கள் எதையும் சமாளிக்கும் துணிவுடன் மன உறுதியுடனும் வாழவேண்டும். இன்று பெரும்பாலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. காவல்துறை. ராணுவம், விமான மாலுமிகள் தொழில்துறை, அரசியல் என இன்னும் எத்தனையோ துறைகளில் பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு நூற்றாண்டு காலப் பெண்களுடைய போராட்டங்களின் வலி நிறைந்த வாழ்க்கையை இந்த மகளிர் தின நன்னாளில் நாம் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்க வேண்டும். மேலும், இந்திய சுதந்திர வரலாற்றிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்திலும் மகளிரின் பங்கு இருந்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. அதிலும், குறிப்பாக தமிழக பெண்களின் பங்கு மகத்தானது. தெற்கே வீரமங்கை வேலு நாச்சியார். வடக்கே ஜான்சிராணி போன்றவர்களின் வீரம் போற்றப்படுகிறது.
பெண்கள் வாழ்வு மேம்படவும். பெண்ணுரிமையை உறுதிப்படுத்தும் வகையிலும், பெண்கள் இன்னல்களில் இருந்து விடுபடவும், அவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யவும். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் பல்வேறு சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தோம்.
பெண் சிசுக் கொலையைத் தடுத்திட தொட்டில் குழந்தை திட்டம்; குழந்தையின் பெயருக்கு முன்பாகத் தாயின் பெயரில் உள்ள முதல் எழுத்தை இனிஷியலாகப் போட்டுக் கொள்ளும் அரசாணை, மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் “குடிமகள்” என்ற சொல்லை பயன்படுத்துதல், இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு அதிரடிப் படை அமைத்தது, ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்; மகப்பேறு நிதியுதவி வழங்கும் திட்டம், குழந்தை நலப் பரிசுபெட்டகம், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு, இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம்; பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திட மகளிர் சுய உதவிக் குழுக்கள், வளரிளம் பெண்களுக்கு விலையில்லா சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், பேருந்து நிலையங்களில் காத்திருக்கும் வேளையில் குழந்தைகளுக்கு தாய்மார்கள் பாலூட்ட தனி அறைகள், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவிகித பதவிகளை ஒதுக்கீடு செய்யும் சட்டம், போன்ற உன்னத திட்டங்களை அளித்து பெண்ணினத்திற்கே பெருமை சேர்த்தோம் என்பதை இந்நன்னாளில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பெண்கள் நம் நாட்டின் கண்களாக இருப்பினும், இன்றைக்கும் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் வன்கொடுமைகள் நடப்பது மனதுக்கு பெரிதும் வேதனை அளிக்கின்றது. அரசை வழிநடத்துபவர்கள் இது போன்ற பெண்களுக்கு எதிரான செயல்கள் நடக்காதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவேண்டும். பெண்கள் நினைத்தால் ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு சமுதாயத்தையே மாற்ற முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெண்களின் பங்கு மிகவும் அத்தியாவசியமானது. ஆண்களுக்கு நிகராக, பெண்கள் எதிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கின்ற வகையில், எத்தகைய சோதனைகள் எதிர்நின்றாலும் அவற்றையெல்லாம் முறியடித்து, துணிச்சலோடும் தன்னம்பிக்கையோடும். அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்கள் முத்திரையை பதித்து, புதிய சரித்திரம் படைத்திட வேண்டும் என வாழ்த்தி, பெண்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நெஞ்சார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










