மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி முயற்சிப்பதாக கூறிய பிரதமர் மோடிக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. குஜராத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்டியலின, பழங்குடியின மற்றும் ஓபிசி பிரிவினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு பாதுகாக்கப்படும் என்றும் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி முயற்சிப்பதாகவும் தாம் உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது என்றும் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில்,”மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவோம் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையிலோ அல்லது இண்டியா கூட்டணி கட்சிகளோ அறிவிக்கவில்லை. பிரதமர் மோடிக்கு இடஒதுக்கீடு குறித்த வரலாறு தெரியவில்லை. தேர்தல் பரப்புரைகளில் இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் பேசி உளறி வருகிறார்.
அரசியலமைப்பு சட்டப்படியே எஸ்.சி. எஸ்.டி. பிரிவுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என மோடிக்கு தெரியவில்லை. இடஒதுக்கீட்டை ரத்து செய்ய மாட்டோம் என காங்கிரஸ் உறுதி தருமா என்று மோடி வரலாறு தெரியாமல் கேட்கிறார்.காங்கிரஸ் ஆட்சியில்தான் பட்டியல், பழங்குடியினர் இடஒதுக்கீடு அமலானது என்ற வரலாற்றை மோடி மறந்துவிட்டார். 1951-ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் ஒ.பி.சி. பிரிவுக்கு இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்பதை மோடி மறந்துவிட்டார். ஒ.பி.சி. பிரிவினருக்கு 27% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது காங்கிரஸ் என்ற வரலாறு மோடிக்கு தெரியவில்லை. 2014 முதல் பா.ஜ.க. அளித்த வாக்குறுதி அனைத்தும் பணமின்றி திரும்பிய காசோலை போன்றது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தவறாக சித்தரித்து பிரதமர் மோடி பொய்யை பரப்பி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் சாடியுள்ளார். மேலும் 50% இட ஒதுக்கீடு வரம்பு உயர்வு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










